தேசிய செய்திகள்

ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் மூலம் ஜனநாயகத்தை உருவாக்க முடியும் - மம்தா பானர்ஜி + "||" + we won because people in Bengal voted for us and we received blessings from people in country, world: West Bengal CM Mamata Banerjee

ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் மூலம் ஜனநாயகத்தை உருவாக்க முடியும் - மம்தா பானர்ஜி

ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் மூலம் ஜனநாயகத்தை உருவாக்க முடியும் - மம்தா பானர்ஜி
ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மூலம் தான் ஜனநாயகத்தை உருவாக்க முடியும் என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,

திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டு வரும் தியாகிகள் தினமான இன்று நாடு முழுவதும் உள்ள மேற்கு வங்க மக்களிடம் காணொலி மூலம் மம்தா பானர்ஜி இன்று பிற்பகல் உரையாற்றினார்.

ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மூலம் தான் ஜனநாயகத்தை உருவாக்க முடியும். இவை மூன்றையும் பெகாசஸ் கைப்பற்றியுள்ளது. பெகாசஸ் மென்பொருள் மிகவும் ஆபத்தானது. இந்த விவகாரத்தால் சரத் பவார், டெல்லி முதல்-மந்திரி, கோவா முதல்-அந்திரி ஆகியோரிடம் என்னால் பேச முடியாது. கண்ணுக்கு தெரியாத பொருளை என் செல்லிடப்பேசியில் பொருத்தியுள்ளார்கள்.

மத்திய அரசை அடக்கி வைக்கவில்லையெனில், நாடு அழிந்துவிடும். கூட்டாச்சி கட்டமைப்பை பாஜக தரைமட்டமாக்கியுள்ளது.

ஜனநாயகத்தையும் நாட்டையும் உச்ச நீதிமன்றம் காப்பாற்ற வேண்டும். அனைவரின் செல்லிடப்பேசியும் வேவு பார்க்கப்பட்டுள்ளதால் நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை விசாரணைக்கு எடுத்து கொள்ளக் கூடாதா? இதுகுறித்து விசாரணை செய்ய ஆணையம் அமைக்க வேண்டும்.

மேலும், ஜூலை 27 அல்லது 28ஆம் தேதிகளில் டெல்லிக்கு செல்ல உள்ளேன். எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தால் அதில் கலந்து கொள்வேன்.

பாஜகவை நாட்டிலிருந்து நீக்கும் வரை அனைத்து மாநிலங்களிலும் 'கேலா' நடக்கும்.

 ஆகஸ்ட் 16 ஆம் தேதி 'கெலா திவாஸ்' கொண்டாடுவோம். ஏழைக் குழந்தைகளுக்கு கால்பந்து கொடுப்போம்.

 இன்று நமது ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. பாஜக நமது ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவின் பத்திரிகையாளர்கள் தொடங்கி பிரான்ஸ் அதிபர் இம்ரான் மேக்ரான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தென்னாப்பிரிக்கா அதிபர் சைரில் ராமஃபோசா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அபிஷேக் பானர்ஜி ஆகியோரின் எண்கள் வேவு பார்கப்படுவதற்காக இலக்கு வைக்கப்பட்டதாக தி வயர் நிறுவனம் அதிர்ச்சி செய்தியை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

பெகாசஸ் மென்பொருளை தயாரித்த இஸ்ரேன் நாட்டை சேர்ந்த என்எஸ்ஒ நிறுவனம், 36 அரசுகளுக்கு பணி செய்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதா அல்லாத கட்சிகளை ஓரணியில் திரட்டுகிறாா், மம்தா - இம்மாதம் டெல்லி சென்று தலைவர்களுடன் சந்திப்பு
மம்தா பானர்ஜி இம்மாதம் டெல்லி செல்கிறார். பா.ஜனதா அல்லாத கட்சிகளை ஓரணியில் திரட்டும் நோக்கத்தில் அவர் பல்வேறு தலைவர்களை சந்திக்கிறார்.
2. ‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக்கு பதிலாக மோடி ‘பெட்ரோலின் குரல்’ நிகழ்ச்சி நடத்தலாம் - மம்தா பானர்ஜி
பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது.
3. சுவேந்து அதிகாரி வெற்றிக்கு எதிராக மம்தா தாக்கல் செய்த மனு மீது 24 ஆம் தேதி விசாரணை
நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதியில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து, மம்தா பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
4. ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பிரச்சினை இல்லை - மம்தா பானர்ஜி
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பிரச்சினை இல்லை என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
5. ஒரு நபருக்கு ஒரு பதவி ;கட்சியிலும், ஆட்சியிலும் நடைமுறைபடுத்தும் மம்தா பானர்ஜி
கட்சியிலும், ஆட்சியிலும் ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற நடைமுறையை மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கொண்டு வந்துள்ளார்.