தேசிய செய்திகள்

நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடி வெளியீடு + "||" + Netrikann movie direct ODT release

நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடி வெளியீடு

நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடி வெளியீடு
இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிகை நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்துக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள இந்தத் திரைப்படத்தில் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.