மாநில செய்திகள்

ஈரோடு புறநகர் மாவட்டம் ஈரோடு புறநகர் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிப்பு - ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு + "||" + Erode Suburban District Divided into Erode Suburban East and West - OBS, EPS Notice

ஈரோடு புறநகர் மாவட்டம் ஈரோடு புறநகர் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிப்பு - ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு

ஈரோடு புறநகர் மாவட்டம் ஈரோடு புறநகர் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிப்பு - ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு
அதிமுக நிர்வாக வசதியை கருத்தில்கொண்டு ஈரோடு புறநகர் மாவட்டம் ஈரோடு புறநகர் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.
சென்னை,

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

அதிமுக நிர்வாக வசதியை கருத்தில்கொண்டு ஈரோடு புறநகர் மாவட்டம் என செயல்பட்டு வரும் மாவட்ட கழக அமைப்பு இன்று முதல் கழக அமைப்பு ரீதியாக ஈரோடு புறநகர் கிழக்கு, மேற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு கீழ்கண்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும்.

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்

* பவானி சட்டமன்றத்தொகுதி(104)

*பெருந்துறை சட்டமன்றத்தொகுதி(103)

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்

* கோபிச்செட்டிபாளையம் சட்டம்ன்றத்தொகுதி(106)

* அந்தியூர் சட்டம்ன்றத்தொகுதி(105)

* பவானிசாகர் (தனி) சட்டமன்றத்தொகுதி(107) 

இதன் அடிப்படையில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக செங்கோட்டையன் மற்றும் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக கே.சி.கருப்பணன் ஆகியோர் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கழக அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும், சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கழக பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவில் திருத்தி அமைக்கப்பட்ட கழகம் மற்றும் சார்பு அமைப்புகளுக்கான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுங்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.