தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று மேலும் 17,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- 105 பேர் உயிரிழப்பு + "||" + Kerala reports 17,481 new COVID cases, 14,131 recoveries, and 105 deaths today

கேரளாவில் இன்று மேலும் 17,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- 105 பேர் உயிரிழப்பு

கேரளாவில் இன்று மேலும் 17,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- 105 பேர் உயிரிழப்பு
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது
திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 17,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் மாநிலத்தில்இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 32,05,197 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 11,21 சதவீதமாக உள்ளது.

மாநில முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 105 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,617 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 14,131 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 30,59,441 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 1,29,640 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் வார இறுதி ஊரடங்கு தொடரும் - கேரள மாநில அரசு அறிவிப்பு
கேரளாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடரும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் 2-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
3. பக்ரீத் பண்டிகைக்காக ஊரடங்கை தளர்த்திய கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்துவதில் வணிகர்களின் கோரிக்கையை கேரள அரசு ஏற்று இருப்பது அதிர்ச்சியூட்டும் விவகாரம் என்று சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.
4. கேரளாவில் கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் 11% ஆக உயர்வு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,931- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் இன்று மேலும் 6,017 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 6,017 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.