தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு + "||" + Three more infections of Zika virus have been confirmed in Kerala : Kerala Health Minister Veena George

கேரளாவில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

கேரளாவில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு
கேரளாவில் ஜிகா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 41- ஆக உயர்ந்துள்ளது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் கொரோனா வைரஸ் 2-வது அலையின் பாதிப்பே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ஜிகா வைரஸ் பாதிக்கப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். 

ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ், மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சலும் பரவுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு பரவினால், அவர் மூலம் வயிற்றில் உள்ள சிசுவும் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படலாம். இதனால் குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவும் கூட சில நேரங்களில் ஏற்படலாம். ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள்வரை உடலில் இருக்கும் பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7 வது நாளில் அறிகுறிகள் காணப்படும். 

இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதன் மூலம் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. ஜிகா வைரஸ் பாதிப்பால் தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று மேலும் 17,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- 105 பேர் உயிரிழப்பு
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது
2. கேரளாவில் வார இறுதி ஊரடங்கு தொடரும் - கேரள மாநில அரசு அறிவிப்பு
கேரளாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடரும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
3. பக்ரீத் பண்டிகைக்காக ஊரடங்கை தளர்த்திய கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்துவதில் வணிகர்களின் கோரிக்கையை கேரள அரசு ஏற்று இருப்பது அதிர்ச்சியூட்டும் விவகாரம் என்று சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.
4. கேரளாவில் கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் 11% ஆக உயர்வு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,931- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் மேலும் 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு - சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ்
கேரளாவில் ஜிகா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 37- ஆக உயர்ந்துள்ளது.