தேசிய செய்திகள்

மராட்டியத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை - சுகாதாரத்துறை மந்திரி தகவல் + "||" + No (COVID) patient died due to lack of oxygen in the state: Maharashtra Health Minister Rajesh Tope

மராட்டியத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை - சுகாதாரத்துறை மந்திரி தகவல்

மராட்டியத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை - சுகாதாரத்துறை மந்திரி தகவல்
மராட்டியத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.
மும்பை,

கொரோனா இரண்டாவது அலை, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சத்தில் இருந்தது. அப்போது திடீரென ஆக்ஸிஜன் தேவை அதிகரித்தது. பல இடங்களில் பற்றாக்குறை நிலவியது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கர்நாடகா, கோவா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நோயாளிகள் உயிரிந்தனர். இது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதற்கிடையில் கொரோனா 2-வது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமான நோயாளிகள் சாலைகளில் விழுந்து உயிரிழந்தது குறித்தும், மருத்துவமனைகளில் உயிரிழந்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாகப் பதில் அளித்தார்.

இந்த நிலையில், மராட்டியத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியதாவது:-

மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்த ஒரு கொரோனா நோயாளியும் உயிரிழக்கவில்லை. இது தொடர்பாக நாங்கள் பிரமாணப் பத்திரத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். மருத்துவ நோக்கங்களுக்காகவும், தொழில்துறை பயன்பாட்டிற்காக 100% ஆக்சிஜனை நாங்கள் திருப்பி அனுப்பிவிட்டோம். மாநிலத்தில் எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜன் இல்லாத நிலை ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் புதிதாக 6,910- பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் நேற்று கொரோனா பாதிப்பு குறைந்தது. இதில் மாநிலத்தில் புதிதாக 6 ஆயிரத்து 910 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.
2. மராட்டியத்தில் இன்று மேலும் 6,017 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 6,017 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மும்பை கார்கர் மலையில் சிக்கி தவித்த 116 சுற்றுலா பயணிகள் மீட்பு
மும்பை கார்கர் மலையில் சிக்கித் தவித்த 78 பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உள்பட 116 சுற்றுலாப் பயணிகளை போலீசார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் குழு மீட்டனர்.
4. மராட்டியத்தில் ஒரே நாளில் 9 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு - 180 பேர் பலி
மராட்டியத்தில் இதுவரை 62 லட்சத்து 14 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5. மராட்டியத்தில் புதிதாக 7,761 பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,761 - பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.