மாநில செய்திகள்

தமிழகத்தில் குறைந்து கொண்டே வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 1,891 பேருக்கு தொற்று உறுதி + "||" + Tamilnadu reports 1,891 fresh #COVID cases, 2,423 recoveries, and 27 deaths in the past 24 hours.

தமிழகத்தில் குறைந்து கொண்டே வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 1,891 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் குறைந்து கொண்டே வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 1,891 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று புதிதாக 1,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த மாத இறுதியில் இருந்து தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,41,168 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,809 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று மேலும் 2,423 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,81,201 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 26,158 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் இன்று 183 பேருக்கும், ஈரோட்டில் 121 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 41 ஆயிரத்து 248 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சேலம் மாவட்டத்தில் இன்று 138 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி 2-ம் தவணை போடப்படுகிறது
சேலத்தில் இன்று 138 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி 2-ம் தவணை போடப்படுகிறது.
2. மராட்டியத்தில் இன்று மேலும் 6,857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 6,857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. அசாம்-மிசோரம் இடையே இன்று பேச்சுவார்த்தை - மத்திய அரசு ஏற்பாடு
அசாம்-மிசோரம் இடையே இன்று பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
4. சேலம் மாவட்டத்தில் இன்று 138 மையங்களில் கோவிஷீல்டு 2-ம் தவணை தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் இன்று 138 மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-ம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
5. தமிழகத்தில் காற்றாலைகள் மின்சார உற்பத்தியில் உச்சத்தில் உள்ளது - எரிசக்தி துறை அதிகாரிகள் தகவல்
தமிழகத்தில் காற்றாலைகள் மின்சார உற்பத்தியில் உச்சத்தில் உள்ளது என்று எரிசக்தி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.