தேசிய செய்திகள்

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு அனுமதி: போலீஸ் குவிப்பு + "||" + Special CP (Crime) Satish Golcha & Joint CP Jaspal Singh visit Jantar Mantar where farmers are scheduled to hold a protest against three farm laws tomorrow

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு அனுமதி: போலீஸ் குவிப்பு

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு அனுமதி: போலீஸ் குவிப்பு
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு டெல்லி அரசு அனுமதி வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தி உள்ளது.

ஆனால் இந்த புதிய சட்டங்களால் தங்களது வாழ்வாதாரம் பறிபோகும் என்றும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 6 மாதங்களாக  தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  விவசாயிகளிடம் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று போராட்டம் நடத்தும் விவசாயிகள் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர். ஆனால் எக்காரணம் கொண்டும் வேளாண் சட்டங்கள் திரும்ப பெற மாட்டாது என்று மத்திய அரசும் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கான எவ்வித அனுமதியும் இதுவரை வழங்கப்படவில்லை என மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை தெரிவித்து வந்தது. ஆனால், டெல்லி அரசு விவசாயிகளின் போராட்டத்திற்கு அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது. 

இது குறித்து டெல்லி பேரிடர் மேலாண்மை வாரியம், "விவசாயிகள் ஜந்தர் மந்தர் பகுதியில் காலை 11முதல் மாலை 5 மணி வரை நாளை (ஜூலை 22) தொடங்கி ஆகஸ்ட் 9 வரை போராட்டம் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது." என தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த போராட்டத்தில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே நாடாளுமன்றம் அருகே கூடுவதற்கும் போராட்டம் நடத்துவதற்கும் இதுவரை விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வ அனுமதி  வழங்கவில்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

நாளை (ஜூலை 22) தொடங்கும் இந்த போராட்டம் ஆகஸ்ட் 9 வரை நடைபெறுகிறது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரும் ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.