தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மீண்டும் 8 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு + "||" + Maharashtra reports 8,159 new #COVID cases, 7,839 patient discharges, and 165 deaths in the past 24 hours

மராட்டியத்தில் மீண்டும் 8 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் மீண்டும் 8 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் இன்று மேலும் 8,159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும்  மெல்ல மெல்ல சரிந்து வருகிறது. 

அதன்படி, மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 8,159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,37,755 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 165 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,30,918 ஆக அதிகரித்துள்ளது.

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 7,839 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60,08,750 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது வரை மாநிலத்தில் 94,745 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

2. மராட்டியத்தில் மேலும் 6,600 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இன்று மேலும் 6,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. கேரளாவில் இன்று 20,772-பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று 20,772-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டோக்கியா நகரில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 3,300 பேர் பாதிப்பு
ஜப்பான் முழுவதும் 10743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டோக்கியோவில் ஒரே நாளில் 3,300 பேர் பாதிப்பு
5. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சமாக உயர்வு
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.