தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இதுவரை 41.76 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது + "||" + cumulative vaccination coverage to over 41.76 crores: Union Health Ministry

நாடு முழுவதும் இதுவரை 41.76 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

நாடு முழுவதும் இதுவரை 41.76 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
கொரோனா கொரோனா தடுப்பூசி வழங்கலின் 187-வது நாளான இன்று 41.76 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. ஆரம்பத்தில் சுகாதாரப்பணியாளர்களும், முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

இந்தநிலையில், நாடு முழுவதும் இதுவரை 41.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தகவலின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 20.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, இதுவரை மொத்தம் 41.76 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதில் முதல் தவணையாக 33,01,13,016 பேருக்கும், இரண்டாது தவணையாக 8,75,43,736பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.