உலக செய்திகள்

பெகாசஸ் விவகாரத்தில் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான பட்டியல் தவறானது- இஸ்ரேல் நிறுவனம் விளக்கம் + "||" + Israel Sets Up Team Of Ministers To Examine Pegasus Scandal

பெகாசஸ் விவகாரத்தில் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான பட்டியல் தவறானது- இஸ்ரேல் நிறுவனம் விளக்கம்

பெகாசஸ் விவகாரத்தில் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான பட்டியல் தவறானது- இஸ்ரேல் நிறுவனம் விளக்கம்
இந்த விவகாரத்தில் வெளியாகி இருக்கும் பட்டியல் தவறானது என என்.எஸ்.ஓ. நிறுவனம் நேற்று விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி, 

இந்தியாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மத்திய மந்திரிகள், பத்திரிகையாளர்கள் உள்பட 300 பேரின் செல்போன்கள் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இந்த விவகாரத்தில் வெளியாகி இருக்கும் பட்டியல் தவறானது என என்.எஸ்.ஓ. நிறுவனம் நேற்று விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெகாசஸ் விவகாரத்தில் உளவுபார்க்கப்பட்டதாக வெளியான பட்டியல் சரியானது அல்ல. அந்த செல்போன் எண்கள் என்.எஸ்.ஓ குழுமத்துடன் தொடர்புடையது அல்ல’ என்று குறிப்பிட்டு உள்ளது. அதேநேரம் தங்கள் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் குறித்து விசாரிப்பதாகவும், தேவையான இடங்களில் அமைப்பை மூடிவிடுவோம் எனவும் அறிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வருவாய் அதிகரிப்பு- மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்
இது அரசாங்கமா? அல்லது பழைய இந்தி படங்களில் வரும் பேராசை பிடித்த வட்டிக்கடைக்காரரா? என மத்திய அரசை ராகுல் காந்தி சாடியுள்ளார்.
2. நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் இருந்து ராகுல் காந்தி வெளிநடப்பு
டெல்லியில் இன்று பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் கூடியது.
3. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி - தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் ஆகியோரின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்தும் பெற்றுள்ளது.
4. கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றுங்கள்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்ற வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
5. பாலிவுட் நடிகர் திலீப் குமார் மறைவு: தலைவர்கள் இரங்கல்
பழம் பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.