உலக செய்திகள்

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தன + "||" + Fresh batch of 3 Rafale fighter jets land in India after flying 7,000 km non-stop from France

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தன

பிரான்சில் இருந்து  மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தன
இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ள ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி, 

இந்தியா, பிரான்சிடம் இருந்து ரபேல் வகை போர் விமானங்களை ஒப்பந்தம் செய்து வாங்குகிறது. 2016-ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி ரூ.58 ஆயிரம் கோடிக்கு 36 விமானங்கள் வாங்கப்படுகிறது. இதுவரை 21 விமானங்கள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு விமானப்படையில் சேர்க்கப்பட்டு உள்ளது.

தற்போது 7-வது முறையாக, 3 ரபேல் போர் விமானங்கள், பிரான்சில் இருந்து நேற்று வந்து சேர்ந்தன. அவை 8 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை இடையில் நிற்காமல் கடந்து இந்தியா வந்து சேர்ந்தன. விமானங்கள் இடைவிடாமல் பறந்துவந்தபோது அரபு எமிரேட்சில் நடுவானில் எரிபொருளை நிரப்பிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் சேர்த்து, இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ள ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரான்சில் புதிய கொரோனா விதிமுறைகள்: தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம்
பிரான்சில் அறிவிக்கப்பட்ட புதிய கொரோனா விதிமுறைகளால், மக்களிடம் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ளும் வேகம் அதிகரித்துள்ளது.
2. பிரான்சில், செப்டம்பரில் கொரோனா 4-ம் அலை ஏற்பட வாய்ப்பு
பிரான்சில் கொரோனா 4-வது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசின் அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
3. பிரான்சில் இனி முகக்கவசம் கட்டாயம் இல்லை, ஊரடங்கும் கைவிடப்படுகிறது
பிரான்சில் முகக்கவசம் அணிவதில் இருந்து சில விதி விலக்குகளுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
4. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சுற்றுலா வரலாம்: பிரான்ஸ் அழைப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வரலாம் என்று பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.
5. பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,541 பேருக்கு கொரோனா பாதிப்பு
பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,541 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.