உலக செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் கொரோனா ஆபத்து தவிர்க்க முடியாதது: உலக சுகாதார அமைப்பு + "||" + COVID-19 risk inevitable at Tokyo Olympics: WHO chief

டோக்கியோ ஒலிம்பிக்கில் கொரோனா ஆபத்து தவிர்க்க முடியாதது: உலக சுகாதார அமைப்பு

டோக்கியோ ஒலிம்பிக்கில் கொரோனா ஆபத்து தவிர்க்க முடியாதது:  உலக சுகாதார அமைப்பு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது என, உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார்
டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது என, உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.  உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு புள்ளி விபரத்தின் மூலம், ஒலிம்பிக் போட்டியில் வைரஸ் பாதிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. வைரஸ் பிரச்னையை முற்றிலும் ஒழிப்பதென்பது முடியாத காரியம். விளையாட்டு வீரர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விரைவாக அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த வேண்டும். இதன்மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம். 

ஆனால், உலகில் வழங்கப்பட்ட தடுப்பூசியில், 75 சதவீதத்தை, 10 நாடுகள் மட்டுமே பங்கு போட்டுக் கொண்டுள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் டெல்டா மாறுபாட்டை விட அதிக பரவல் கொண்டதும், ஆபத்து நிறைந்ததுமான மற்றுமொரு மாறுபாட்டை மனிதகுலம் விரைவில் பார்க்கக்கூடும்” என்றார்

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் மேலும் 48,161-பேருக்கு கொரொனா தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 48,161- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா பாதிப்பு: டெல்லியில் இன்று உயிரிழப்பு இல்லை
டெல்லியில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 592- ஆக குறைந்துள்ளது.
3. தமிழகத்தில் 2,079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனாவால் 2,079 பேர் இன்று பாதிக்கப்பட்டு உள்ளனர். 29 பேர் உயிரிழந்து உள்ளனர்.
4. டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் தங்கியுள்ள கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. ஆந்திரா, கோவா மாநிலங்களின் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,672- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.