மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை + "||" + Anti-corruption police raid 6 places owned by former minister MR Vijayabaskar

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை. 

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சோதனையையொட்டி கரூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

இதன்படி கருர் மற்றும் சென்னையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இல்லம், அவரது நிறுவனம் மற்றும் அவரது உறவினர்களின் இல்லம் உள்பட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் செந்தில் பாலாஜியிடம் தோல்வியை தழுவினார். போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் 3 பேருக்கு சம்மன்: நேரில் ஆஜராக உத்தரவு
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் 3 பேருக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
2. அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்!
அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம்(90) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.