தேசிய செய்திகள்

இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 41,383 பேருக்கு தொற்று + "||" + India reports 41,383 new Covid-19 cases, 507 more deaths

இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 41,383 பேருக்கு தொற்று

இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 41,383 பேருக்கு தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

கொரோனா 2வது அலையில் நாட்டில் பாதிப்புகள் திடீர் உச்சம் அடைந்தது. இதனை தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் எண்ணிக்கை உயர தொடங்கியநிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. 

இந்த சூழலில் இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு 42 ஆயிரமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 41 ஆயிரத்து 383 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சத்து 57 ஆயிரத்து 720 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 507 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,18,987 ஆக உயர்ந்து உள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.34 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 38,652 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 04 லட்சத்து 29 ஆயிரத்து 339 ஆக உயர்வடைந்து உள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.35 சதவீதமாக உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது வரை 4,09,394 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 41,78,51,151 ஆக அதிகரித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நான்காம் நாள் ஆட்டம் நிறைவு: நியூசிலாந்து வெற்றிபெற 280 ரன்கள் தேவை
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
2. கான்பூர் டெஸ்ட்: 4-ம் நாள் தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 216 ரன்கள் முன்னிலை
4- நாள் தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது.
3. கான்பூர் டெஸ்ட்; 2- வது இன்னிங்சில் இந்தியா திணறல்
கான்பூர் டெஸ்ட் போட்டியின் 4- ஆம் நாளான இன்று இந்திய கிரிக்கெட் அணி தடுமாறி வருகிறது.
4. இந்தியாவில் புதிதாக 8,774 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 621 பேர் பலி....!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் ‘ஒமிக்ரான்’ வைரசால், 3-வது அலைக்கு வாய்ப்பு...! மருத்துவ நிபுணர் எச்சரிக்கை
புதிய வகை ‘ஒமிக்ரான்’ வைரஸ், இந்தியாவில், 3-வது அலையை தூண்டலாம் என்று மருத்துவ நிபுணரான நரேஷ் புரோகித் எச்சரித்துள்ளார்.