மாநில செய்திகள்

நடிகர் விஜய் வழக்கு: விசாரணைக்கு பட்டியலிட சென்னை ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Actor Vijay case: Chennai High Court orders list for trial

நடிகர் விஜய் வழக்கு: விசாரணைக்கு பட்டியலிட சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் விஜய் வழக்கு: விசாரணைக்கு பட்டியலிட சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தனி நீதிபதி உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை, 

நடிகர் விஜய் 2012-ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்தக் காருக்கான அனுமதிக்கப்பட்ட வரிகளை செலுத்தியிருந்தார். ஆனால், தமிழக அரசு விதிக்கும் நுழைவு வரியை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்து அண்மையில் உத்தரவிட்டார். மேலும் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், தன்னைப் பற்றிய விமர்சனத்தை எதிர்த்தும் நடிகர் விஜய் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். 

இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வரி தொடர்பான மேல்முறையீடுகளை விசாரணை செய்யும் அமர்வுக்கு மாற்றம் செய்ய பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் இந்த வழக்கு, வரி தொடர்பான மேல் முறையீட்டு விசாரணை செய்யும் நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பு நகலின்றி விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற நடிகர் விஜய்-யின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்படி தனி நீதிபதி உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கமல்ஹாசனுக்கு வரவேற்பு அளித்ததில் விதிமீறல்; ம.நீ.ம. நிர்வாகிகள் மீது வழக்கு
கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை வரவேற்ற அக்கட்சி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
2. தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கு: சென்னை ஐகோர்ட்டு நாளை உத்தரவு
நடப்பு கல்வியாண்டில், தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நாளை உத்தரவு பிறப்பிக்கிறது
3. கிஷோர் கே சுவாமி ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு - காவல்துறை பதிலளிக்க உத்தரவு
தன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி கிஷோர் கே சுவாமி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
4. சொகுசு காருக்கு நுழைவு வரி வழக்கில் நடிகர் விஜய் மீதான அபராதத்துக்கு இடைக்கால தடை!
சொகுசு காருக்கு நுழைவு வரி கட்டுவதில் விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்து, நுழைவு வரியை ஒரு வாரத்தில் கட்ட ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
5. நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை - சென்னை ஐகோர்ட் உத்தரவு
நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.