தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி : நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு + "||" + Lok Sabha has been adjourned till 2 pm

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி : நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின்  தொடர் அமளி : நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
12 மணிக்கு அவை கூடியதும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி, 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13ந் தேதி வரை நடைபெற உள்ளது.  இக்கூட்டத் தொடரில் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. இப்பிரச்சினை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், கடந்த 3 நாட்களாக மக்களவை முடங்கியது. இந்த நிலையில் இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

12 மணிக்கு அவை மீண்டும் கூடியதும்  எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
 
முன்னதாக, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் அவை ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: ஹர்ஷவர்தனை பலிகடா ஆக்கினார் பிரதமர் மோடி - மல்லிகார்ஜுன கார்கே
கொரோனா பாதிப்பு விவகாரத்தில் ஹர்ஷவர்தனை பலிகடா ஆக்கிவிட்டார் பிரதமர் மோடி என மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டி உள்ளார்.
2. பெகாசஸ் உளவு விவகாரம்: எதிர்க்கட்சிகள் தொடர் அமளி இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைப்பு
கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று காலை முதலே மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால் அவையை பிற்பகல் 2 மணிவரை தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
3. பெகாசஸ் உளவு விவகாரத்தை இரு அவைகளிலும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுவதை அமித்ஷா மறுத்துள்ளார்.
4. எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலைவரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் நாளை காலை 11 மணிவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
5. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரு அவைகளும் மீண்டும் ஒத்தி வைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மாலை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.