மாநில செய்திகள்

புதையல் இருப்பதாக வீட்டிற்குள் 20 அடி ஆழத்திற்கு குழி தோண்டிய ஐஸ் வியாபாரி + "||" + Inside the house that there is treasure pit was dug to a depth of 20 feet Ice dealer

புதையல் இருப்பதாக வீட்டிற்குள் 20 அடி ஆழத்திற்கு குழி தோண்டிய ஐஸ் வியாபாரி

புதையல் இருப்பதாக வீட்டிற்குள் 20 அடி ஆழத்திற்கு  குழி தோண்டிய ஐஸ்  வியாபாரி
பெரம்பலூர் அருகே புதையல் இருப்பதாக கூறி பூஜை செய்து, வீட்டிற்குள் 20 அடி ஆழத்திற்கு குழிதோண்டிய 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. ஐஸ் வியாபாரம் செய்து வரும் இவரது வீட்டிற்குள் புதையல் இருப்பதாக ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார்.

இதை நம்பி பரமத்திவேலூரைச் சேர்ந்த பூசாரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் என 7 பேர் சேர்ந்து  பூஜைகள் செய்துள்ளனர்.

பின்னர் பிரபுவின் வீட்டிற்குள்ளேயே மூன்று நாட்களாக இரவு பகலாக 20 அடி ஆழத்திற்கு மேல் குழி தோண்டியுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த அருகாமையில் உள்ளவர்கள், புதையலுக்காக நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்துடன் பெரம்பலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அந்த வீட்டிற்கு சென்ற போலீசார், 7 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.