தேசிய செய்திகள்

பெகாசஸ் உளவு விவகாரம்: உத்தரவு பிறப்பித்தது யார்? ப.சிதம்பரம் கேள்வி + "||" + Pegasus spy case: Who issued the order? P. Chidambaram Question

பெகாசஸ் உளவு விவகாரம்: உத்தரவு பிறப்பித்தது யார்? ப.சிதம்பரம் கேள்வி

பெகாசஸ் உளவு விவகாரம்: உத்தரவு பிறப்பித்தது யார்? ப.சிதம்பரம் கேள்வி
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13ந் தேதி வரை நடைபெற உள்ளது.  இக்கூட்டத் தொடரில் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்நிலையில், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில்,

உத்தரவு இல்லாமல் யாரையும் உளவு பார்க்கவில்லை என்று அரசு சொல்கிறது. அப்படியென்றால், உத்தரவு பிறப்பித்து உளவு பார்த்தோம் என்று அரசு ஒப்புக்கொள்கிறதா? உத்தரவு பிறப்பித்தது யார்? எந்த உளவு மென்பொருளைப் பயன்படுத்தி உளவு பார்த்தார்கள்?

அந்த மென்பொருளின் பெயர் என்ன? எந்த நாட்டு நிறுவனத்திடமிருந்து என்ன விலை கொடுத்து வாங்கினார்கள்?
இந்தக் கேள்விகளுக்கு யார் பதில் சொல்லுவார்கள? என கேள்வி எழுப்பி உள்ளார்.