சினிமா செய்திகள்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை சாந்தினி வழக்கு + "||" + To former Minister Manikandan Rs. 10 crore in damages case of actress Chandini

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை சாந்தினி வழக்கு

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை சாந்தினி வழக்கு
முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நடிகை சாந்தினி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை

சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் சினிமா படத்தில் நடித்துள்ளார். மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்தார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார், என்று தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மணிகண்டன் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது 

இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார். 

சென்னையில் இருந்து கொண்டு வழக்கை நடத்த வேண்டும் என்ற காரணத்தினால் தனக்கு மாதாந்திர இடைக்கால தொகை வழங்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

நடிகை தொடர்ந்த வழக்கு அடுத்த மாதம் 5ம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். 

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் போது பிரச்சனை ஏற்பட்டால் இழப்பீடு கோரலாம் என்ற உத்தரவின் அடிப்படையில் நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
2. முன்னாள் அமைச்சர் கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு; டாக்டர் பரபரப்பு வாக்குமூலம்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக தனியார் மருத்துவமனை டாக்டர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3. சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்
ஏ.சி. வசதியுடன் கூடிய அறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக வந்த தகவல் படி சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
4. சிறையில் சொகுசு வசதிகள்: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்
சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சொகுசு வசதிகளுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
5. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்ற காவல்
பாலியல் புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூலை 2 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.