மாநில செய்திகள்

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி உடன் அண்ணாமலை சந்திப்பு + "||" + Annamalai meeting with O. Panneer Selvam and Edappadi Palanisamy

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி உடன் அண்ணாமலை சந்திப்பு

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி உடன் அண்ணாமலை சந்திப்பு
சென்னையில் அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.
சென்னை,

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் மு.அண்ணாமலை நேரில் சந்தித்து, பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கி வாழ்த்துப் பெற்றார்.

அப்போது, பா.ஜ.க. நிர்வாகிகளும் உடன் இருந்தனர். இதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையும் நேரில் சந்தித்து அவர் வாழ்த்துப் பெற்றார்.

தமிழக பாஜக தலைவராக அண்மையில் பொறுப்பேற்ற அண்ணாமலை மரியாதை நிமித்தமாக ஈபிஎஸ்-ஓபிஎஸ்-ஐ சந்தித்து வாழ்த்து பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.