மாநில செய்திகள்

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரூ.25.56 லட்சம் பறிமுதல் + "||" + 25.56 lakh confiscated from places owned by MR Vijayabaskar

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரூ.25.56 லட்சம் பறிமுதல்

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரூ.25.56 லட்சம் பறிமுதல்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.25.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,

கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 23 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

காலை 7 மணி முதல் சென்னை மற்றும் கரூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை என 23 இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னை ஆர்யபுரத்தில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்த காரிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்தனர்.

விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.25.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,   26 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சொத்து, முதலீட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.