மாநில செய்திகள்

முன்னாள் முதல்-அமைச்சர் வெற்றி பெற்றது செல்லாது; சென்னை ஐகோர்ட்டில் வழக்கு + "||" + The former CM victory is invalid; Case in Chennai HC

முன்னாள் முதல்-அமைச்சர் வெற்றி பெற்றது செல்லாது; சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

முன்னாள் முதல்-அமைச்சர் வெற்றி பெற்றது செல்லாது; சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
சென்னை,

தமிழக சட்டசபைக்கான தேர்தலில் முன்னாள் முதல்-அமைச்சர் மற்றும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் போடிநாயக்கனுர் தொகுதியில் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் தங்க தமிழ்செல்வன் போட்டியிட்டார். தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ஓ. பன்னீர்செல்வம், தங்க தமிழ்செல்வனை விட 11,055 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் போடி தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் வெற்றிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் போடி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  

அதில், அ.தி.மு.க. வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தனது வேட்புமனுவில் விவரங்களை மறைத்துள்ளார். எனவே அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று வாக்காளர் மிலானி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் விஜய் வழக்கு: விசாரணைக்கு பட்டியலிட சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தனி நீதிபதி உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2. ஆயிஷா சுல்தானா மீதான வழக்கு - லட்சத்தீவு போலீசார் கேரளா ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல்
ஆயிஷா சுல்தானா தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை எதிர்த்து லட்சத்தீவு போலீசார் கேரளா ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
3. பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து வழக்கு
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குக்கு போலீஸ் கமிஷனர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. சட்டசபை தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு
சட்டசபை தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.
5. பிரதமர் வீடுகட்டும் திட்டத்தில் ரூ.35 லட்சம் மோசடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 18 பேர் மீது வழக்கு
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் உண்மையான பயனாளிகளுக்கு ஒதுக்கிய ரூ.35 லட்சத்தை கையாடல் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட 3 வட்டார வளர்ச்சி அதிகாரிகள், என்ஜினீயர் உள்ளிட்ட 18 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.