உலக செய்திகள்

உலக அளவில் 75% கடந்த டெல்டா வகை கொரோனா; உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி + "||" + Delta type corona lasting 75% of the world; World Health Organization shock

உலக அளவில் 75% கடந்த டெல்டா வகை கொரோனா; உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி

உலக அளவில் 75% கடந்த டெல்டா வகை கொரோனா; உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி
உலக அளவில் 4 வாரங்களில் 75%க்கும் மேற்பட்ட டெல்டா வகை கொரோனா பதிவாகி உள்ளன என உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தெரிவித்துள்ளது.



ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கொரோனா வைரசுகளில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவை டெல்டா வகையை சோந்தவையாக உள்ளன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 4 வாரங்களாக கொரோனா நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு, டெல்டா வகை என்று உறுதி செய்யப்பட்ட கொரோனா மாதிரிகளின் எண்ணிக்கை 75% கடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா, மற்ற வகைகளை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது.
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வந்தாலும், சில நாடுகளில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தனது அறிக்கையில் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அதிவேக கார் மோதி பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட ஆட்டோ: ஒருவர் பலி - அதிர்ச்சியூட்டும் வீடியோ
அதிவேக கார் மோதி ஆட்டோவில் பயணம் செய்த நபர் பலியான சம்பவம் தொடர்பாக, அதிர்ச்சியூட்டும் வீடியோவை சைபராபாத் போலீசார் வெளியிட்டுள்ளனர்
2. திருவாரூரில் திராவகம் ஊற்றி அழிக்கப்படும் பனை மரங்கள் இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி
திருவாரூரில் சாலையோரங்களில் பனை மரங்கள் திராவகம் ஊற்றி அழிக்கப்படுவது இயற்கை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3. சீனாவில் 24 வகையான வவ்வால் கொரோனா வைரசுகள்; சர்வதேச விஞ்ஞானிகள் குழு அதிர்ச்சி
சீனாவில் கொரோனா வைரசின் தோற்றம் பற்றிய ஆய்வில், 24 வகையான வவ்வால் கொரோனா வைரசுகள் கண்டறியப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
4. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு: ஓடி ஓடி வேலை பார்த்த குஷ்புவுக்கு அதிர்ச்சி
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு: ஓடி ஓடி வேலை பார்த்த குஷ்புவுக்கு அதிர்ச்சி பா.ஜ.க.வுக்கு ஏமாற்றம்.
5. கல்பாக்கம் அணுமின்நிலைய சுற்றுவட்டார பகுதியில் பத்திரப்பதிவு செய்யக்கூடாது அறிவிப்பால் கிராம மக்கள் அதிர்ச்சி
கல்பாக்கம் அணுமின்நிலைய சுற்றுவட்டார பகுதியில் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்ற அறிவிப்பால் கிராம மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.