மாநில செய்திகள்

சர்ச்சை பேச்சு விவகாரம்: கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி + "||" + Controversial speech: Arrested priest George Ponnaya admitted to hospital due to ill health

சர்ச்சை பேச்சு விவகாரம்: கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

சர்ச்சை பேச்சு விவகாரம்: கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருந்தது.
நெல்லை,

இந்துக் கடவுள்களையும், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் இழிவாக பேசியதாக கிறிஸ்தவ மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர் தேடப்பட்டு வந்தார். 

இந்த சூழலில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் தேடப்பட்டு வந்த கிறிஸ்துவ மத போதகர் ஜார்ஜ்  பொன்னையாவை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க குழித்துறை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் இந்து மதக் கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சிறை மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் சர்ச்சையில் நடிகை சமந்தா
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவும் காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர்.
2. சர்ச்சை கதையில் அனுஷ்கா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அனுஷ்கா நடிப்பில் கடைசியாக சைலன்ஸ் படம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஓ.டி.டி, தளத்தில் வெளியானது.
3. கே.டி.ராகவன் வீடியோ விவகாரம்: விசாரணை நடத்த பா.ஜனதா குழு அமைப்பு அண்ணாமலை அறிக்கை
கே.டி.ராகவன் சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரத்தில் விசாரணை நடத்த பா.ஜனதா மாநிலச்செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.