தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் + "||" + 9 killed in landslide in Himachal Pradesh: President Ramnath Govind mourns

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்
இமாச்சல பிரதேசம் கின்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
சிம்லா,

இமச்சால பிரதேசம் கின்னார் மாவட்டத்தில் உள்ள சங்லா பள்ளத்தாக்கில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாகச் சுற்றுலாப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த டெம்போ ஒன்று இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 9 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.

இந்த நிலச்சரிவு வீடியோ சமூக வலைதளங்களில்வைரலாகியது. அந்த வீடியோவில் பெரிய பாறைகள் மலையில் இருந்து உருண்டு உடைத்து கீழே பள்ளத்தாக்கில் விழுகிறது. இதில் அங்கிருந்த பாலம் அப்படியே தரைமட்டமாகிறது. சம்பவ இடத்திற்கு உடனடியாக மருத்துவ குழுவினர் விரைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கின்னார் மாவட்ட எஸ்பி சஜு ராம் ராணா தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில் இமாச்சல பிரதேசத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய விரும்புகிறேன்” என்று அதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நேபாளத்தில் கனமழை நிலச்சரிவில் 6 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்து உள்ளனர்.
2. மும்பையில் பலத்த மழை; ஓரிரு இடங்களில் நிலச்சரிவு
மும்பையில் மீண்டும் பெய்த பலத்த மழை காரணமாக ஓரிரு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
3. மராட்டிய மாநில வெள்ளம்: பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு ;100 பேர் மாயம்
மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே சதாரா மாவட்டத்தில் பதான் தாலுகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடுகிறார்.
4. மராட்டியம்: வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 140 பேர் பலி ; ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்
மராட்டிய மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பான பிற சம்பவங்கள் காரணமாக நேற்று மாலை வரை 76 பேர் பலியாகி உள்ளனர். 59 பேர் மாயமாகி உள்ளனர்
5. மராட்டிய மாநிலத்தில் பலத்த மழை : நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி, 30 பேர் மாயம்
மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.