தேசிய செய்திகள்

புனேவில் இருந்து சென்னை வந்த 17.4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி + "||" + 17.4 lakh cow shield vaccine from Pune to Chennai

புனேவில் இருந்து சென்னை வந்த 17.4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி

புனேவில் இருந்து சென்னை வந்த 17.4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி
மராட்டியத்தின் புனே நகரில் இருந்து சென்னைக்கு 17.4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்து உள்ளன.
சென்னை,

மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள மத்திய மருந்து கிடங்கிலிருந்து 17.4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை அரசு விடுவித்தது.  இந்த 145 பார்சல் தடுப்பூசிகளை பயணிகள் விமானத்தில் சென்னைக்கு கொண்டு வர முடியாத சூழலில், அவை சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டன.

இந்த விமானம் புனேவிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்தது.  உடனடியாக இவை தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. 

கோவேக்சின் தடுப்பூசி பற்றாக்குறையால், கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை அரசு கொள்முதல் செய்து பயன்படுத்தி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பிரிட்டன், கனடாவில் இருந்து மத்திய பிரதேசம் வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு
பிரிட்டன், கனடாவில் இருந்து மத்திய பிரதேசம் வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.