தேசிய செய்திகள்

புதுச்சேரி ஓராண்டுக்கு பின் திறக்கப்பட்ட ஞாயிற்று கிழமை சந்தை; களை கட்டிய வர்த்தகம் + "||" + Pondicherry Sunday Market Opens One Year Later; trade increased

புதுச்சேரி ஓராண்டுக்கு பின் திறக்கப்பட்ட ஞாயிற்று கிழமை சந்தை; களை கட்டிய வர்த்தகம்

புதுச்சேரி  ஓராண்டுக்கு பின் திறக்கப்பட்ட ஞாயிற்று கிழமை சந்தை; களை கட்டிய வர்த்தகம்
புதுச்சேரியில் ஓராண்டுக்கு பின் ஞாயிற்று கிழமை சந்தை நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.


புதுச்சேரி,

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச்சில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது.  இதனை தொடர்ந்து கடைகள், கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன.

புதுச்சேரியிலும் இதே நிலை நீடித்தது.  இந்த நிலையில், கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் புதுச்சேரியில் குறைந்து வருகின்றன.  இதனால்,
ஞாயிற்று கிழமை சந்தையானது, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஓராண்டுக்கு பின் நேற்று (ஞாயிற்று கிழமை) திறந்து விடப்பட்டது.

இதனையடுத்து, பொதுமக்கள் கடைகளில் குவிய தொடங்கினர்.  சிலர் முக கவசங்களை அணிந்தும், சிலர் அணியாமலும் காணப்பட்டனர்.  இதுபற்றி வர்த்தகர் ஒருவர் கூறும்போது, இந்த சந்தை ஏறக்குறைய 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் முடக்கப்பட்டது.

இதனால் வர்த்தக ரீதியாக எங்களை பாதித்தது.  மீண்டும் கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.  இதனால், இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்பும் என்று கூறியுள்ளார்.