தேசிய செய்திகள்

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு; உயிரிழப்பில் கர்நாடகாவுக்கு 2வது இடம் + "||" + Susceptibility to black fungal infections; Karnataka ranks 2nd in fatalities

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு; உயிரிழப்பில் கர்நாடகாவுக்கு 2வது இடம்

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு; உயிரிழப்பில் கர்நாடகாவுக்கு 2வது இடம்
கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் கர்நாடகா 2வது இடம் பிடித்து உள்ளது.
பெங்களூரு,

நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளான நோயாளிகள் அதிலிருந்து குணமடைந்த பின்பு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு ஆளானார்கள்.

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 84 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என சுகாதார துறை தெரிவித்து உள்ளது.  இவற்றில் கர்நாடகா நான்காம் இடத்தில் உள்ளது.

கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் இதர பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்து காணப்படுகிறது.  எனினும், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கையில் கர்நாடகா 2வது இடம் வகிக்கிறது.