தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மழை, நிலச்சரிவு: மீட்பு பணிக்காக சென்ற என்.டி.ஆர்.எப்.பின் 34 குழுக்கள் + "||" + Rain, landslides in Marathaland: 34 teams after NDRF went for rescue mission

மராட்டியத்தில் மழை, நிலச்சரிவு: மீட்பு பணிக்காக சென்ற என்.டி.ஆர்.எப்.பின் 34 குழுக்கள்

மராட்டியத்தில் மழை, நிலச்சரிவு:  மீட்பு பணிக்காக சென்ற என்.டி.ஆர்.எப்.பின் 34 குழுக்கள்
மராட்டியத்தில் மழை மற்றும் நிலச்சரிவுகளில் இருந்து மக்களை மீட்கும் பணிக்காக என்.டி.ஆர்.எப்.பின் 34 குழுக்கள் சென்றுள்ளன.
மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனை தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.  இதனால், வீடுகள், பயிர்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளன.  நிலச்சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன.

இந்நிலையில், தேசிய பேரிடர் பொறுப்பு படை சார்பில் நேற்று முன்தினம் வெளியான அறிக்கையில், நிலச்சரிவு பகுதிகளில் இருந்து உயிரிழந்த 52 உடல்களை மீட்டு உள்ளோம்.  அந்த பகுதியில் சிக்கி தவித்த 1,800 மக்களை மீட்டுள்ளோம் என தெரிவித்திருந்தது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி கொண்ட 87 பேரை மீட்டு பாதுகாப்பு மிக்க பகுதிக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளோம்.  காணாமல் போனவர்களை தொடர்ந்து தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

இதேபோன்று மராட்டியத்தின் ராய்காட், ரத்னகிரி மற்றும் சத்தாரா மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என தெரிவித்தது.

இந்நிலையில், மராட்டியத்தில் மழை மற்றும் நிலச்சரிவுகளில் இருந்து மக்களை மீட்கும் பணிக்காக என்.டி.ஆர்.எப்.பின் 34 குழுக்கள் சென்றுள்ளன.  அவர்கள் நேற்று 500 பேரை வெளியேற்றியும், 44 பேரை மீட்டும் உள்ளனர்.

இதுவரை மொத்தம் நிர்கதியற்று தவித்த 3,100 பேரை மீட்டுள்ளனர்.  1,250 பேரை வெள்ள பகுதிகளில் இருந்து வெளியேற்றி உள்ளனர்.  90 உடல்களையும் அவர்கள் மீட்டுள்ளனர்.  காணாமல் போன 33 பேரை தேடும் பணியிலும் அவர்கள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் சோதனை சாவடியில் நிற்காமல் சென்ற இளம் டாக்டர் சுட்டு கொலை
ஆப்கானிஸ்தானில் சோதனை சாவடியில் நிற்காததற்காக புதிதாக மணமுடித்த இளம் டாக்டரை தலீபான்கள் சுட்டு கொன்றனர்.
2. நிலச்சரிவில் சிக்காமல் தப்பிய 14 பயணிகளுடன் சென்ற பேருந்து; வைரலாகும் வீடியோ
உத்தரகாண்டில் 14 பயணிகளுடன் சென்ற பேருந்து நிலச்சரிவு பாதிப்பில் இருந்து தப்பிய வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது.