பிற விளையாட்டு

ஒலிம்பிக்: வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + India Archery Men's Team Qulaified for Quarerfinals in tokyo olympics

ஒலிம்பிக்: வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

ஒலிம்பிக்: வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று வில்வித்தை போட்டியில் ஆண்கள் அணிக்கான எலிமினேஷன் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய ஆண்கள் அணி கஜகஸ்தான் ஆண்கள் அணியை எதிர்கொண்டது.

இந்திய ஆண்கள் அணியில் அதானு தாஸ், பிரவின் ஜாதவ், தரூன்தீப் ராய் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். போட்டி தொடங்கியது முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் இந்திய ஆண்கள் அணி 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தான் ஆண்கள் அணியை வீழ்த்தியது. 

இந்த வெற்றியின் மூலம் ஆண்கள் அணி வில்வித்தை போட்டியில்  காலிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. காலிறுதி சுற்றில் இந்திய ஆண்கள் அணி தென்கொரியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
2. ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.
3. 2028- லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை இடம் பெற செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்அறிவித்துள்ளது.
4. டோக்கியோ மாரத்தான்: மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்டாரா..? பிரான்ஸ் வீரர்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரர் ஒருவர் மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்ட நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
5. டோக்கியோ ஒலிம்பிக்: 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் சாதனை
டோக்கியோ ஒலிம்பிக்கில் 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் தங்கம் வென்றதுடன் சாதனை படைத்து உள்ளார்.