பிற விளையாட்டு

ஒலிம்பிக்: வாள்வீச்சு போட்டி இரண்டாவது சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி தோல்வி + "||" + Bhavani devi Lose second Round of women's sabre individual in fencing

ஒலிம்பிக்: வாள்வீச்சு போட்டி இரண்டாவது சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி தோல்வி

ஒலிம்பிக்: வாள்வீச்சு போட்டி இரண்டாவது சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியின் இரண்டாவது சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி தோல்வியடைந்தார். இதனால், அவர் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.
டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று வாள்வீச்சு விளையாட்டு நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார். அவர் தனது முதல் சுற்றில் துனிசியா நாட்டின் வீராங்கனை நடியா பென் அஜிசியை 15-3 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தார். இதன் மூலம், இரண்டாவது சுற்றான
டேபிள் 32 சுற்றுக்கு முன்னேறினார்.

டேபிள் 32 சுற்றில் அவர் பிரான்ஸ் நாட்டு வீராங்கனை மனோன் பெர்னெட்டை எதிர்கொண்டார். போட்டியின் தொடக்கம் முதலே பெர்னெட் ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 7-15 என்ற புள்ளிகள் கணக்கில் பெர்னெட் வெற்றிபெற்றார். 7 புள்ளிகளை பெற்ற பவானிதேவி தோல்வியடைந்தார். இதனால், பவானிதேவி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை
இழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
2. ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.
3. 2028- லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை இடம் பெற செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்அறிவித்துள்ளது.
4. டோக்கியோ மாரத்தான்: மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்டாரா..? பிரான்ஸ் வீரர்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரர் ஒருவர் மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்ட நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
5. டோக்கியோ ஒலிம்பிக்: 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் சாதனை
டோக்கியோ ஒலிம்பிக்கில் 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் தங்கம் வென்றதுடன் சாதனை படைத்து உள்ளார்.