சினிமா செய்திகள்

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல் நல குறைவால் காலமானார் + "||" + veteran actress jayanthi passes away

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல் நல குறைவால் காலமானார்

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல் நல குறைவால் காலமானார்
ஜெயந்தி சினிமாவில் நடித்த அந்த காலத்திலேயே மிகவும் தைரியமான ரோல்களில் நடித்தார்.
சென்னை

மறைந்த மூத்த நடிகர்கள் ஜெமினி கணேசன், எம்.ஜி.ஆர் உள்பட பல நடிகர்களுடன் நடித்த நடிகை ஜெயந்தி காலமானார்.

எதிர்நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘பாமா விஜயம்’, ‘வெள்ளி விழா’ உட்பட ஏராளமான தமிழ்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜெயந்தி. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்புக்காக 7 முறை கர்நாடக மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார்.

ஜெயந்தி சினிமாவில் நடித்த அந்த காலத்திலேயே மிகவும் தைரியமான ரோல்களில் நடித்தார். எம்.ஜி.ஆரு.டன் படகோட்டி, முகராசி மற்றும் ஜெமினி கணேசனுடன் கண்ணா நலமா, வெள்ளிவிழா, புன்னகை, இருகோடுகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரில் தனது மகன் வீட்டில் வசித்து வந்த ஜெயந்தி கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் தற்போது அவர் மரணமடைந்துள்ளார். இதையடுத்து திரையுலகினரும், ரசிகர்களும் அவரது மறைவுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மனிதாபிமானமற்ற மந்தானா...! ராஷ்மிகாவை விமர்சிக்கும் ரசிகர்கள்
தன்னிடம் உணவு கேட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவாத ராஷ்மிகா மந்தனா கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.
2. இன்ஸ்டாகிராமில் இணைந்த நடிகை மீரா ஜாஸ்மின்
இன்ஸ்டாகிராமில் தனது பெயரில் புதிய கணக்கை மீரா ஜாஸ்மின் தொடங்கி தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்
3. ஒரு முத்தக் காட்சிக்கு ரூ.50 லட்சம் வாங்கிய நடிகை
அனுபமா பரமேஸ்வரன் ரவுடி பாய்ஸ் படத்தில் ஆஷிஷ் ரெட்டியுடன் முத்தம் கொடுத்து நடித்து உள்ளார்.
4. தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி பிரிவு : உறவினர்கள், நண்பர்கள் தொடர்ந்து சமரச முயற்சி
தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரம் நேற்றும், இன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
5. நடிகர்களின் விவாகரத்துகள் "நல்ல டிரெண்ட் செட்டர்கள்"- ராம் கோபால் வர்மா சர்ச்சை டுவிட்
நடிகர்களின் விவாகரத்துகள் "நல்ல டிரெண்ட் செட்டர்கள்"-என டைரக்டர் ராம் கோபால் வர்மா சர்ச்சை டுவிட் வெளியிட்டு உள்ளார்.