தேசிய செய்திகள்

கார்கில் போர் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் ராஜ்நாத்சிங் அஞ்சலி + "||" + Delhi: Defence Minister Rajnath Singh and Minister of State for Defence, Ajay Bhatt pay tribute at National War Memorial on the occasion of

கார்கில் போர் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் ராஜ்நாத்சிங் அஞ்சலி

கார்கில் போர் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் ராஜ்நாத்சிங் அஞ்சலி
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
புதுடெல்லி,

கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதிக்குள் ஊடுருவி ஆக்கிரமித்தது. இது பனி சூழ்ந்த மலை முகடுகளை கொண்ட பகுதி ஆகும். இதைத்தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்கள், பாகிஸ்தான் சிப்பாய்களை எதிர்த்து தீவிரமாக போரிட்டனர். ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த போர் சுமார் 3 மாதங்கள் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தான் சிப்பாய்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.

இந்த போரில் பாகிஸ்தான் தரப்பில் ஏராளமான சிப்பாய்கள் பலி ஆனார்கள். இந்திய தரப்பில் 500-க்கும் அதிகமான வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஆபரேஷன் விஜய் போரில் வெற்றி பெற்றதாக 1999-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. 

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ந் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது. 22-வது கார்கில் போர் வெற்றி தினம்  இன்று  கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்  டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


தொடர்புடைய செய்திகள்

1. குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம் இடம்பெறாதது ஏன்? மத்திய அரசு விளக்கம்
"வல்லுநர் குழு தான் அலங்கார ஊர்தி அணிவகுப்பை தேர்வு செய்கிறது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
2. பாகிஸ்தானுக்கு எதிரான மறைமுக போரிலும் வெற்றி பெறுவோம்! -ராஜ்நாத்சிங் உறுதி
பொன்விழா கொண்டாட்டத்தை கோலாகலமாக கொண்டாட விரும்பினோம்.ஆனால், பிபின் ராவத்தின் எதிர்பாராத மரணத்தால் எளிமையாக கொண்டாடுகிறோம்.
3. அமைதியை விரும்பும் நாடாக இருந்தாலும் எந்த சவாலையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது - ராஜ்நாத்சிங் உறுதி
இந்தியா, அமைதியை விரும்பும் நாடு. தேவை ஏற்பட்டால், எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளது என்று ராஜ்நாத்சிங் கூறினார்.
4. இந்தியா அமைதியை விரும்பும் நாடு - ராஜ்நாத் சிங்
இந்தியா அமைதியை விரும்பும் நாடாகவே இருந்து வருகிறது... அதுவாகவே இருக்கும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.