தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் ஓ பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி சந்திப்பு + "||" + OPS EPS meets Pm modi in delhi

பிரதமர் மோடியுடன் ஓ பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

பிரதமர் மோடியுடன்  ஓ பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
பிரதமர் மோடியை சந்தித்தபின்பு இருவரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க உள்ளனர்.
புதுடெல்லி,

தமிழகத்தில் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். 

அதேபோல், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9.30 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இருவரும் ஒரே நாளில் தனித்தனியாக விமானத்தில் புறப்பட்டு டெல்லி சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியை ஒ  பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சந்தித்துப் பேசினர். அதிமுக விவகாரங்கள், தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்டவை குறித்து இந்த சந்திப்பின் போது பேசப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 பிரதமருடனான இந்த சந்திப்பின் போது, மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம், தம்பிதுரை,  ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!
நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
2. உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்
உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
3. இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு பிரம்மாண்ட சிலை - பிரதமர் மோடி அறிவிப்பு
டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-க்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
4. பிரதமர் மோடி கடவுளின் அவதாரம்..!! - மத்திய பிரதேச மந்திரி கருத்து
காங்கிரசின் அராஜகங்களுக்கு முடிவு கட்ட பிறந்த கடவுளின் அவதாரம், மோடி என்று மத்திய பிரதேச மந்திரி தெரிவித்துள்ளார்.
5. டெலிபிராம்ப்டரால் கூட இவ்வளவு பொய்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை: மோடியை கலாய்த்த ராகுல் காந்தி
'டெலிப்ராம்ப்டரால் கூட இவ்வளவு பொய்களை ஏற்க முடியவில்லை' என பிரதமரின் உரையை ராகுல் காந்தி கிண்டலடிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.