தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு + "||" + Rajya Sabha adjourned till 2 pm amid sloganeering in the House by Opposition MPs, against 'Pegasus Project' media report.Lok Sabha adjourned till 2 pm

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி:  இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை  19 தொடங்கியது.  ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  பெகாசஸ் மென்பொருள் மூலம் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை நாடாளுமன்றம் கூடியதில் இருந்தே அவையில் எதிரொலித்து வருகிறது. 

இவ்விவகாரத்தை மையப்படுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கை முடங்கியுள்ளது.  இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றும் அமளி நீடித்தது. இதனால், இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற மேலவை மதியம் 2 மணிவரை ஒத்தி வைப்பு
நாடாளுமன்ற மேலவை எதிர்க்கட்சிகள் அமளியால் மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
2. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு
எதிர்கட்சிகள் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
3. சாலமன் தீவுகளில் வன்முறை: நாடாளுமன்றத்துக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு..!
சாலமன் தீவுகளில் ஏற்பட்ட வன்முறையின்போது, அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
4. எதிர்க்கட்சிகள் அமளி; 15-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது
எதிர்க்கட்சிகளின் அமளியால் நடாளுமன்றம் 15-வது நாளாக முடங்கியது.
5. எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் 11-வது நாளாக முடக்கம்
எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.