தேசிய செய்திகள்

பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம்: விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு- மம்தா பானர்ஜி + "||" + Bengal Sets Up First Panel To Investigate Pegasus Scandal

பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம்: விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு- மம்தா பானர்ஜி

பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம்:  விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு- மம்தா பானர்ஜி
பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம் குறித்து விசாரணை நடத்த மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழுவை அமைத்துள்ளார்.
கொல்கத்தா

பெகாசஸ் செல்போன் உளவு விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கடட்சிகள் போராட்டம் நடத்தின. சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று அவை வலியுறுத்தின.

இஸ்ரேல் நாட்டின் பெகாஸ் என்னும் உளவுமென்பொருளைப் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட 300 முக்கிய பிரமுகர்களின் செல்போன்களை ஒட்டு கேட்க இலக்கு வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அருக்கு எதிராக எதிர்க்கட்ிகள் ஒன்றுதிரண்டு போர்க்கோலம் பூண்டு வருகின்றன.

ஒட்டு கேட்பு புகார்களை மத்திய அரும், பா.ஜ.க.வும் மறுத்து வருகின்றன. இது புனையப்பட்ட கதை, ஆதாரம் இல்லாதவை என அவை கூறுகின்றன. ஆனாலும் நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கி உள்ளது.

இந்த  நிலையில் மேற்கு வங்காள முதல் மந்திரி   மம்தா பானர்ஜி  மாநிலத்தில் பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட  ஒரு குழுவை அமைத்துள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதிகள் எம்.வி. லோகூர் மற்றும் ஜோதிர்மாய் பட்டச்சாரியா  ஆகியோர் கொண்ட  ஒரு குழுவை அமைத்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் 70 ஆண்டுகளில் உருவாக்கியதை பாஜக 7 ஆண்டுகளில் விற்றுவிட்டது; ராகுல் காந்தி
புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடிக்கு எதிராக எந்த ஊடகமும் கேள்வி எழுப்பவில்லை என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
2. மம்தா பானர்ஜியை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தப் போவது இல்லை; காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
3. பவானிபூர் தொகுதியில் மம்தாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு
அரசியல் நன்றியுணர்வை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளிக்காட்டவில்லை என்று மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
4. தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த காங்கிரஸ் அனுமதிக்காது: டி.கே.சிவக்குமார்
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்காது என்றும், இதுபற்றி சட்டசபை கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்றும் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
5. அரியானாவில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி; ராகுல்காந்தி கண்டனம்
அரியானாவில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.