தேசிய செய்திகள்

பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி + "||" + No cadre in the AIADMK with dissatisfied- EPS says

பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமியும், ஓ பன்னீர்செல்வமும் சந்தித்துப் பேசினர்.
புதுடெல்லி,

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றனர். இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் பிரதமர் மோடியை இருவரும் சந்தித்துப்பேசினர். இந்த சந்திப்பில் தமிழக அரசியல் சூழல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ அதிமுகவில் எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை. சட்டப்பேரவை தேர்தலில் பிரசாரம் செய்ததற்காக பிரதமரிடம் நன்றி தெரிவித்தோம். 

தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினோம். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி தரக்கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தினோம். கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரினோம். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தினோம்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களவைக்கு புதுச்சேரியில் இருந்து பா.ஜ.க.வுக்கு முதன்முதலாக இடம் - ஒவ்வொரு தொண்டருக்கும் மகத்தான பெருமை என மோடி நெகிழ்ச்சி
மாநிலங்களவைக்கு புதுச்சேரியில் இருந்து முதன்முதலாக பா.ஜ.க.வுக்கு இடம் கிடைத்துள்ளது. இது ஒவ்வொரு பா.ஜ.க. தொண்டருக்கும் மகத்தான பெருமை என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் கூறி உள்ளார்.
2. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் சிறப்பு பண்புகள் கொண்ட 35 பயிர்வகைகளை மோடி அறிமுகப்படுத்தினார்
பருவநிலை மாற்றம், ஊட்டச்சத்து பற்றாக்குறையை எதிர்கொள்ளும் சிறப்பு பண்புகள் கொண்ட 35 பயிர்வகைகளை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.
3. 'உலக நதி தினம்' நாம் மிக முக்கியமாக கொண்டாட வேண்டிய தினம் - பிரதமர் மோடி
பல்வேறு நாட்கள் கொண்டாடப்பட்டாலும் நாம் மிக முக்கியமாக கொண்டாட வேண்டிய தினம் 'உலக நதி தினம்' என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
4. பிரதமர் மோடியிடம் அமெரிக்கா ஒப்படைத்த 157 கலைப்பொருட்கள்!
பிரதமர் மோடி நாடு திரும்பும்போது அவரிடம் இந்தியாவைச் சேர்ந்த 157 பழங்கால கலைப் பொருள்களை அமெரிக்கா ஒப்படைத்தது.
5. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன் - பிரதமர் மோடி
கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன் என்று ஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேசினார்.