பிற விளையாட்டு

டோக்கியோ: வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு! + "||" + Tokyo Olympics: Weightlifter Hou to be tested by anti-doping authorities, silver medallist Chanu stands chance to get medal

டோக்கியோ: வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு!

டோக்கியோ: வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு!
பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனைக்கு உடபடுத்தபட்டதால் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
டோக்கியோ

ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.  டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கத்தை  மீராபாய் சானு வென்று உள்ளார்.

இந்த பிரிவில் சீனாவின் ஹூ ஜிஹுய் ஒரு ஒலிம்பிக் சாதனையை உருவாக்கி  தங்கம் வென்றார். இந்தோனேசிய வீராங்கனை  கான்டிகா ஐசா வெண்கல பதக்கம் வென்றார்.

இந்த நிலையில் தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்டது உறுதியானால் அவரது பதக்கம் பறிக்கப்படும் அடுத்த இடத்தில் இருக்கும்  மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
2. ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.
3. 2028- லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை இடம் பெற செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்அறிவித்துள்ளது.
4. டோக்கியோ மாரத்தான்: மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்டாரா..? பிரான்ஸ் வீரர்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரர் ஒருவர் மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்ட நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
5. டோக்கியோ ஒலிம்பிக்: 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் சாதனை
டோக்கியோ ஒலிம்பிக்கில் 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் தங்கம் வென்றதுடன் சாதனை படைத்து உள்ளார்.