பிற விளையாட்டு

வெள்ளிபதக்கம் வென்ற மீரா பாய் சானு நாடு திரும்பினார் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு + "||" + Tokyo 2020: Mirabai Chanu returns home to Bharat Mata ki Jai chants at airport

வெள்ளிபதக்கம் வென்ற மீரா பாய் சானு நாடு திரும்பினார் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

வெள்ளிபதக்கம் வென்ற மீரா பாய் சானு நாடு திரும்பினார் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
நான் மணிப்பூரை மட்டும் சேர்ந்தவர் அல்ல, நான் முழு நாட்டையும் சேர்ந்தவர் என்று மீரா பாய் சானு கூறினார்.
புதுடெல்லி

வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு "பாரத் மாதா கி ஜெய்" என்ற கோஷங்களுடன் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மீராபாய் சானு ஒலிம்பிக்கின் முதல் நாளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்,  கர்ணம் மல்லேஸ்வரிக்குப் பிறகு பளுதூக்குதலில் பதக்கம் வென்ற இரண்டாவது வீராங்கனை  ஆவார்.

மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு பாதுகாப்புப் படையினரால் விமான நிலையத்திற்கு வெளியே அழைத்துச் வரப்பட்டார். தனது இந்தியா பயிற்சி ஜெர்சி அணிந்திருந்தார் மீராபாய்.

அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கம் வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மணிப்பூரைச் சேர்ந்தவர் அல்ல, நான் முழு நாட்டையும் சேர்ந்தவர் என்று கூறினார்.

டோக்கியோ ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு மணிப்பூர் அரசால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக(விளையாட்டு) நியமிக்கப்பட உள்ளதாக முதல் மந்திரி என் பிரேன் சிங் திங்களன்று அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் மீராபாய் சானு  பங்கு பெற்ற பிரிவில் தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்டது உறுதியானால் அவரது பதக்கம் பறிக்கப்படும் அடுத்த இடத்தில் இருக்கும்  மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். வீரர்கள் ஏலம்: இளம் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு..!
19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் அசத்தி வருகின்றனர்.
2. டிஆர்எஸ் முறைக்கு எதிர்ப்பு; ‘ஸ்டெம்ப் மைக்’கில் பதிவான இந்திய வீரர்களின் உரையாடல்கள்
உங்கள் அணியில் கவனம் செலுத்துங்கள், எதிரணியின் மீது அல்ல என்று விராட் கோலி மிகக்கடுமையாக சாடியுள்ளார்.
3. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீரர்கள் முன்னேற்றம்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
4. உலக குத்துச்சண்டை: முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றனர்.
5. பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.