தேசிய செய்திகள்

பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி கண்காணிப்பில் விசாரணை வேண்டும் -சசி தரூர் + "||" + Shashi Tharoor demands SC-monitored probe into Pegasus snooping allegations

பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி கண்காணிப்பில் விசாரணை வேண்டும் -சசி தரூர்

பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி  கண்காணிப்பில் விசாரணை வேண்டும் -சசி தரூர்
பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
கொல்கத்தா

பெகாசஸ் செல்போன் உளவு விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கடட்சிகள் போராட்டம் நடத்தின. சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று அவை வலியுறுத்தின.

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்னும் உளவுமென்பொருளைப் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட 300 முக்கிய பிரமுகர்களின் செல்போன்களை ஒட்டு கேட்க இலக்கு வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டு போர்க்கோலம் பூண்டு வருகின்றன.

ஒட்டு கேட்பு புகார்களை மத்திய அரும், பா.ஜ.க.வும் மறுத்து வருகின்றன. இது புனையப்பட்ட கதை, ஆதாரம் இல்லாதவை என அவை கூறுகின்றன. ஆனாலும் நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கி உள்ளது.

இன்று மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில்  காங்கிரஸ் மூத்த தலைவரும், ஐ.டி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவருமான சசி தரூர் இது குறித்து கூறியதாவது:-

பெகாசஸ் செல்போன் உளவு குற்றச்சாட்டுகள் குறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி  கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும் இது குறித்த விவாதத்திற்கு அரசாங்கம் ஒப்புக் கொள்ளும் வரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு  தெரிவிக்கும்.

அரசாங்கம் தனது சுயநல அரசியல் லாபத்திற்காக பொது பணத்தை அபகரிக்க பயன்படுத்தியதாக தெரிகிறது.

இந்த விவகாரம் குறித்த விவாதத்திற்கு அரசாங்கம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் அது தயாராக இல்லை. நாங்கள் சொல்வது என்னவென்றால், நீங்கள் இதற்கு உடன்படவில்லை , எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றால், நாடாளுமன்றத்தை நடத்த நாங்கள் ஏன் அனுமதிக்க வேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெகாசஸ் செல்போன் உளவு விவாகாரம்: மூத்த பத்திரிகையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு
பெகாசஸ் செல்போன் உளவு விவாகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி மூத்த பத்திரிகையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்து உள்ளார்.