தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 105 வயது மூதாட்டி: நேரில் சென்று வாழ்த்திய முதல்-மந்திரி + "||" + A 105-year-old Tribal woman in Tripura's Brahmachhera village gets her first jab of COVID vaccine

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 105 வயது மூதாட்டி: நேரில் சென்று வாழ்த்திய முதல்-மந்திரி

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 105 வயது மூதாட்டி: நேரில் சென்று வாழ்த்திய முதல்-மந்திரி
திரிபுரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 105 வயது மூதாட்டியை அம்மாநில முதல்-மந்திரி பிப்லப் குமார் தேப் நேரில் சென்று வாழ்த்தி உள்ளார்.
திரிபுரா மாநிலம் பிரம்மஹிரா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 105 வயது மூதாட்டி தாரா கன்யா தெப்பமா கரோனா நோய்த் தடுப்பூசி எடுத்துக்கொண்டதை அறிந்த அம்மாநில முதல்-மந்திரி பிப்லப் குமார் தேப் அம்மூதாட்டியை நேரில் சென்று வாழ்த்தினார்.

105 வயது மூதாட்டியை சந்திப்பின் பின் முதல்-மந்திரி டுவிட்டர் பதிவில்,

தெப்பமாவிடம் மோடியின் புகைப்படத்தைக் காட்டியதும் அவர் அடையாளம் கண்டுகொண்டார். 105 வயது மூதாட்டி தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் போது உங்களுக்கு என்ன...அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.