தேசிய செய்திகள்

அசாம்-மிசோரம் எல்லை மோதலில் 6 போலீசார் உயிரிழப்பு + "||" + Six jawans of Assam Police have lost their lives in Assam-Mizoram border tensions: Assam CM Himanta Biswa Sarma

அசாம்-மிசோரம் எல்லை மோதலில் 6 போலீசார் உயிரிழப்பு

அசாம்-மிசோரம் எல்லை மோதலில் 6 போலீசார் உயிரிழப்பு
அசாம்-மிசோரம் எல்லை மோதலில் 6 போலீசார் உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது.
கவுகாத்தி,

அசாம் - மிசோரம் எல்லையில் ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு பணியில் இருந்த 6 காவலர்கள் உயிரிழந்தாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. குலிசெர்ராவின் எல்லையோர பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினை அமைதி மற்றும் புரிந்துணர்வு சூழ்நிலையில் தீர்க்கப்பட வேண்டும் என்று மிசோரம் அரசு விரும்புகிறது.

  அதன்படி, சர்ச்சைக்கு அமைதியான தீர்வு காண ஒரு இணக்கமான சூழலை உருவாக்க அசாம் அரசுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என மிசோரம் முதல்-மந்திரி சோரம்தங்கா தெரிவித்துள்ளர். மேலும் மத்திய உள்துறை மந்திரி தலையீட்டால், அசாம் காவல்துறை அந்த இடத்திலிருந்து விலகியதோடு, அந்த பணி  சிஆர்பிஎஃப் வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.