தேசிய செய்திகள்

அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டமா? நிர்மலா சீதாராமன் பதில் + "||" + No plan to print currency notes to tide over crisis: Nirmala Sitharaman

அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டமா? நிர்மலா சீதாராமன் பதில்

அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டமா? நிர்மலா சீதாராமன் பதில்
பொருளாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்காக அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் திட்வட்டமாக தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

மக்களவையில்  மத்திய நிதி மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. கடந்த 2020 - 2021 நிதியாண்டுக்கான ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், மைனஸ் 7.3 ஆக உள்ளது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு இருக்கும். 

கொரோனா பரவல் மற்றும் பொது முடக்கத்தால் ஏற்பட்டிருந்த பாதிப்பில் இருந்து மிக வேகமாக மீண்டு வருகிறோம். 

'ஆத்ம நிர்பர்' எனப்படும் தற்சார்பு இந்தியா திட்டத்தின் வாயிலாக பல சலுகைகள், வாய்ப்புகள் தரப்பட்டுள்ளதால் தொழில் துறைகள் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றன.

மசூர் பருப்பு மீதான அடிப்படை சுங்க வரியை அரசு குறைத்துள்ளது மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் பயறு 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.