மாநில செய்திகள்

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்குவது குறித்த அரசாணை: தமிழ்நாடு அரசு வெளியீடு + "||" + Government Order on Special Allocation to the Most Backward Classes: Government of Tamil Nadu Publication

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்குவது குறித்த அரசாணை: தமிழ்நாடு அரசு வெளியீடு

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்குவது குறித்த அரசாணை: தமிழ்நாடு அரசு வெளியீடு
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்குவது குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை, 

வன்னியர், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்தாண்டு முதல் கல்வி சேர்க்கைகளிலும் சிறப்பு ஒதுக்கீடு என அரசாணை மூலம் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த அரசாணையை நடைமுறைப்படுத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம், சீர்மரபினருக்கு 7 சதவிகிதம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 26 (2021) முதல் சிறப்பு ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினருக்கு வழங்கப்பட்டுள்ள 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்குள், வன்னியர்கள், சீர்மரபினர், இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கி ஜூலை மாதம் சட்டம் இயற்றப்பட்டது.

அதனடிப்படையில், அரசுப் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இனச் சுழற்சி முறையைத் திருத்தி அமைக்க விரிவாக ஆலோசனை நடத்தி ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி அளித்தார்.

அந்த வகையில், சட்ட வல்லுநர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடும், சீர்மரபினருக்கு 7 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.அத்துடன் இந்தாண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்வி மாணவர் சேர்க்கையானது மேற்கூறிய சிறப்பு ஒதுக்கீடு முறையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.