தேசிய செய்திகள்

மீராபாய் சானுவுக்கு காவல் துறையில் ஏ.எஸ்.பி. பதவி - மணிப்பூர் அரசு முடிவு + "||" + Mirabai Sanu returns home: High rank in Manipur police

மீராபாய் சானுவுக்கு காவல் துறையில் ஏ.எஸ்.பி. பதவி - மணிப்பூர் அரசு முடிவு

மீராபாய் சானுவுக்கு காவல் துறையில் ஏ.எஸ்.பி. பதவி -  மணிப்பூர் அரசு முடிவு
ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு காவல் துறையில் ஏ.எஸ்.பி. பதவி வழங்க மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.
இம்பால்,

மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு, ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற 49 கிலோ பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.  ஒலிம்பிக் பதக்கத்துடன் ஜப்பானில் இருந்து  நாடு திரும்பிய மீராபாய்க்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அவருக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே வெள்ளி பதக்கம் வென்று மாநிலத்திற்கு பெருமை சேர்ந்த மீராபாய் சானுவுக்கு மணிப்பூர் மாநில காவல் துறையில் ஏ.எஸ்.பி. பதவி வழங்க மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.