தேசிய செய்திகள்

கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,606 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Karnataka reports 1,606 new COVID19 cases, 1,937 recoveries and 31 deaths

கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,606 பேருக்கு கொரோனா பாதிப்பு

கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,606 பேருக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,606 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கடந்த மாதத்தில் இருந்து குறைந்து வருகிறது. 

அதன்படி, கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மாநிலத்தில் இன்று புதிதாக 1,606 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 96 ஆயிரத்து 163 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 23 ஆயிரத்து 057 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரேநாளில் ஆயிரத்து 937 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 36 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 405 ஆக அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் மேலும் 42,470- பேருக்கு கொரோனா
கடந்த சில தினங்களாக பெங்களூருவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது.
2. வண்டலூர் பூங்காவில் விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை - பூங்கா இயக்குனர் தகவல்
வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களே கொரோனா பாதிப்பில் உயிரிழக்கின்றனர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் பின்விளைவுகள் ஏற்பட்டு உள்ளது என்ற எந்த புகாரும் வரவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
4. பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.60 கோடியை தாண்டியது
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,00,851 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. அமெரிக்காவில் ஒரேநாளில் மேலும் 7,66,277 பேருக்கு கொரோனா பாதிப்பு..!
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,66,277 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது