உலக செய்திகள்

தென்ஆப்பிரிக்காவில் குறையும் கொரோனா பாதிப்பு: கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு + "||" + Decreasing corona exposure in South Africa: Announcement of easing of restrictions

தென்ஆப்பிரிக்காவில் குறையும் கொரோனா பாதிப்பு: கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு

தென்ஆப்பிரிக்காவில் குறையும் கொரோனா பாதிப்பு: கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு
தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரசின் 2-ம் அலை பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஜோகன்னஸ்பர்க், 

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரசின் 2-ம் அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய சூழலில், கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு மீண்டும் வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ் அங்கு வேகமாக பரவி வருகிறது.

எனவே வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அந்த நாட்டு அரசு கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கியுள்ளது. அங்கு 4-ம் நிலை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பரவலை பொறுத்து ஊரடங்கை தளர்த்தலாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்று அந்நாட்டு அதிபர் ரமாபோசா தெரிவித்திருந்தார்.

அதன்படி,  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக தென்ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனா வருவதை தொடர்ந்து நாட்டில் அமல்படுத்தப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளில் அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணம், மது விற்பனை போன்றவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தென்ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2-வது ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்
தென்ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று 2-வது ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது.
2. தென்ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ஓய்வு..!
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக தொகைக்கு ஏலம் போன தென்ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் தனது ஓய்வை அறிவித்தார்.
3. தென்ஆப்பிரிக்கா: மினி பஸ்கள் மோதி விபத்து - 9 பேர் பலி
தென்ஆப்பிரிக்காவின் கேப் மாகாணத்தில் மினி பஸ்கள் எதிரெதிரே மோதிய விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர்.
4. இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 19-ந்தேதி பார்ல் நகரில் நடக்கிறது.
5. தென்ஆப்பிரிக்காவின் நாடாளுமன்றத்தில் தீ விபத்து!
இன்று அதிகாலை நாடாளுமன்ற கட்டடத்தின் 3வது மாடியிலிருந்து தீ பரவ தொடங்கியுள்ளது.