உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வன்முறை சம்பவம்; கடந்த 6 மாதங்களில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு 47 சதவீதம் அதிகரிப்பு - ஐ.நா தகவல் + "||" + Violence in Afghanistan Innocent civilian casualties increase by 47% in last 6 months - UN data

ஆப்கானிஸ்தானில் வன்முறை சம்பவம்; கடந்த 6 மாதங்களில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு 47 சதவீதம் அதிகரிப்பு - ஐ.நா தகவல்

ஆப்கானிஸ்தானில் வன்முறை சம்பவம்; கடந்த 6 மாதங்களில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு 47 சதவீதம் அதிகரிப்பு - ஐ.நா தகவல்
ஆப்கானிஸ்தானில் நடைபெறும் வன்முறை சம்பவங்களில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது கடந்த 6 மாதங்களில் 47 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையே நீண்டகால போர் நடைபெற்று வருகிறது.  இதனை முடிவுக்கு கொண்டுவர அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  எனினும் பல சுற்று முடிவில் உடன்பாடு எட்டப்படவில்லை.

அரசுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகின்றன.  இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து படைகளை விலக்கி கொள்வது என அமெரிக்க அரசு முடிவு செய்தது.  எனினும், திட்டமிட்டபடி கடந்த 1ந்தேதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு பதிலாக தள்ளி போனது.  இதன்பின் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் நடைபெறும் வன்முறை சம்பவங்களில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது கடந்த 6 மாதங்களில் 47 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 1,659 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.