மாநில செய்திகள்

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு: முதல்-அமைச்சருக்கு பா.ம.க. நிறுவனர் நன்றி + "||" + 10.5% reservation for Vanni: PM to be First Minister Thanks to the founder

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு: முதல்-அமைச்சருக்கு பா.ம.க. நிறுவனர் நன்றி

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு:  முதல்-அமைச்சருக்கு பா.ம.க. நிறுவனர் நன்றி
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அரசாணை பிறப்பித்ததற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்து கொண்டார்.

சென்னை,

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசாணை பிறப்பித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.5% இட ஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆணையிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.  அவருக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை அறிவிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டாலும், அதிலும் 10.50% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மனநிறைவளிக்கிறது.

பணி நியமனங்களிலும் இந்த ஒதுக்கீடு நடைமுறையாகி விட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.50% நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பதால் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னிய மக்களின் நிலைமை படிப்படியாக மேம்படும் என்று பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. 14 போலீஸ் டி.ஐ.ஜி.க்கள், ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு அரசாணை வெளியீடு
14 போலீஸ் டி.ஐ.ஜி.க்கள், ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு அரசாணை வெளியீடு.
2. 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமைச் செயலாளராக நிலை உயர்வு அரசாணை வௌியீடு
7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமைச் செயலாளராக நிலை உயர்வு அரசாணை வௌியீடு.
3. சூர்யாவிற்கு நன்றி சொன்ன கார்த்தி
முத்தையா இயக்கத்தில் தற்போது விருமன் படத்தில் நடித்திருக்கும் கார்த்தி, அண்ணன் சூர்யாவிற்கு நன்றி சொல்லி இருக்கிறார்.
4. பொதுப்பணித்துறையில் பதிவு செய்ய விரும்பும் ஒப்பந்தக்காரரின் பண வரம்பு உயர்வு அரசாணை வெளியீடு
பொதுப்பணித்துறையில் பதிவு செய்ய விரும்பும் ஒப்பந்தக்காரரின் பண வரம்பு உயர்வு அரசாணை வெளியீடு.
5. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை முக கவசம், ஊசிகள் வாங்க ரூ.32 கோடி அனுமதி அரசாணை வெளியீடு
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக ஊசிகள், முக கவசம் வாங்க ரூ.32 கோடிக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.